வரிசெலுத்தாத வாகனங்களுக்கு அபராதம்


வரிசெலுத்தாத வாகனங்களுக்கு அபராதம்
x
வரிசெலுத்தாத வாகனங்களுக்கு அபராதம்
தினத்தந்தி 25 Feb 2022 10:10 PM IST (Updated: 25 Feb 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

வரிசெலுத்தாத வாகனங்களுக்கு அபராதம்

பொள்ளாச்சி

வாகனங்களுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. இதன் காரணமாக சாலை வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.


கால அவகாசம் முடிந்த பிறகும் வரி செலுத்தாமல் வாகனங்களை இயக்குவதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயந்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா தொற்று காரணமாக வாகனங்கள் சாலை வரி செலுத்துவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகும் சிலர் வரி செலுத்தாமல் உள்ளனர். 
இந்த நிலையில் பாலக்காடு ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வின்போது வரி செலுத்தாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. 

கடந்த ஒரு வாரத்தில் ஒரு பள்ளி வாகனம் உள்பட 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
 இதை தவிர ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. வரி செலுத்தாதவர்கள் உடனே வரி செலுத்த முன்வர வேண்டும். இல்லையெனில் வாகனங்களுக்கான உரிமத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story