‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Feb 2022 11:19 PM IST (Updated: 25 Feb 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்: 

குவிந்து கிடக்கும் குப்பை 
சின்னமனூர் பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம் சுழித்தபடியே செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரிமுத்து, சின்னமனூர்.

பயணிகள் நிழற்குடை வேண்டும்
குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் ஊராட்சி சின்னராவுத்தன்பட்டி, பண்ணைக்குளம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்ததாக கூறி இடிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிதாக அப்பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், கோவிலூர்.

அடிப்படை வசதி செய்யப்படுமா?
திண்டுக்கல் மாநகராட்சி 41-வது வார்டில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வார்டு பகுதியில் அடிப்படை வசதியை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-செல்வம், திண்டுக்கல்.

நெல் கொள்முதல் நிலையம் தேவை
பழனியை அடுத்த மானூரில் நெல் சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. இங்கு நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மானூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முபாரக்அலி, மானூர்.

Next Story