துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது கார் பறிமுதல்
மயிலாடுதுறை அருகே துப்பாக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே துப்பாக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்தனர்.
போலீசார் சோதனை
மயிலாடுதுறை அருகே நீடூர் ரெயில்வே கேட் பகுதியில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அந்த காரில் வந்தவர்களிடம் ஏர்கன்மாடல் துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. உடனே அதனை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து காரை பறிமுதல் செய்து 5 பேரையும் மயிலாடுதுறை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
5 பேர் கைது
விசாரணையில் மயிலாடுதுறை நீடூரை சேர்ந்த சாதிக்பாட்சா (வயது 41), கோவை மரக்கடை பகுதியை சேர்ந்த அப்துல்ரகுமான் மகன் ஆசிம் என்கிற முகமது ஆசிம் (29), சென்னை அயனாவரம் குருவாயூரப்பன் தெருவை சேர்ந்த முகமதுசாதிக் மகன் ரகமத் (39), காரைக்கால் அனஸ் காலனியை சேர்ந்த அப்துல்வகாப் மகன் முகமது இர்பான் (32), மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி ஹாசன் நகரை சேர்ந்த ஜெகபர்அலி (58) என்பது தெரிய வந்தது.
இதில் கோவையை சேர்ந்த முகமது ஆசிப் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சதி திட்டம் தீட்ட முயற்சித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் மீது ஆயுததடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story