காஞ்சீபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ போட்டித்தேர்வுக்கு காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் மார்ச் 3 முதல் தொடங்கப்படஉள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் பல்வேறு அரசு போட்டி தேர்வுகளுக்கு தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பார்வையில் காணும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள குரூப்-2, 2ஏ நேர்முகத்தேர்வுக்கு 116 காலிப்பணியிடங்களும், நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு 5,413 காலிப்பணியிடங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க 23.2.2022 முதல் 23.3.2022 காலஅவகாசம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் உள்ள காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மேற்காணும் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 4.3.2022 முதல் தொடங்ப்படஉள்ளது. விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன் பெறலாம், இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தில், இலவச பயிற்சி வகுப்புகளுடன், அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள், மாதாந்திர பருவ வெளியீடுகள், தினசரி நாளிதழ்கள் மற்றும் வைபை வசதியுடன் கூடிய நூலகமும் பயன்பாட்டுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story