தனது தொகுதியாக நினைத்து கோவை மாவட்டத்துக்கு 234 கோடியை முதல்அமைச்சர் வழங்கி உள்ளார் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்


தனது தொகுதியாக நினைத்து கோவை மாவட்டத்துக்கு 234 கோடியை முதல்அமைச்சர் வழங்கி உள்ளார் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்
x
தினத்தந்தி 26 Feb 2022 8:24 PM IST (Updated: 26 Feb 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

தனது தொகுதியாக நினைத்து கோவை மாவட்டத்துக்கு 234 கோடியை முதல் அமைச்சர் வழங்கி உள்ளார் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்


கோவை

தனது தொகுதியாக நினைத்து கோவை மாவட்டத்துக்கு ரூ.234 கோடியை முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களுட னான ஆலோசனை கூட்டம் தொகுதி வாரியாக காளப்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கி பேசினார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட வில்லை.

 குடிநீர், சாக்கடை, சாலை வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

சிறப்பு நிதிகள் 

இதில், எவ்வாறு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கவுன்சிலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 5 ஆண்டுகளுக்கான பணிகள் திட்டமிடுதல் எடுத்து கொள்ளப்பட உள்ளது. 

முதல்-அமைச்சரிடம் சிறப்பு நிதிகள் பெற உள்ளது. அதற்கான பணிகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

நன்றி என்பது வார்த்தையாக இல்லாமல் திட்டங்கள் மூலம் மக்க ளுக்கு நன்றி செலுத்த உள்ளோம். அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்க ளுக்கு வர உள்ள நிதிகள் வேறு பணிக்கு பயன்படுத்தப்பட்டது. தூய்மையான நிர்வாகத்தை வழங்க உள்ளோம்.

234 கோடி நிதி

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வெளிப்படை தன்மையு டன் நடைபெற்றது. இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை.

 வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.234 கோடியை கோவை மாவட்டத்துக்கு தனது தொகுதியாக நினைத்து முதல் - அமைச்சர் கோவைக்கு வழங்கி உள்ளார். 


தமிழக முதல்-அமைச்சரின் பிறந்தநாளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக விளையாட்டு போட்டி நடத்தி சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தை பொறுத்த வரை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் புதிய மின் உற்பத்தி முயற்சிகள் எடுக்கப்பட வில்லை. 

மு.க.ஸ்டாலின் கோட்டை

கடந்த ஆட்சியில் தவறு இழைத்திருந்தால் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேயராக விரும்பும் மாமன்ற உறுப்பினர்க ளிடம் விருப்ப கடிதம் கேட்டுள்ளோம். 

அது முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். அவர் முடிவு செய்வார். முதல்- அமைச்சரின் ஆலோசனையின் பேரில் மாவட்டந்தோறும் மின் பூங்கா வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. 

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு பழைய நடைமுறைப்படியே வழங்கப்படும். மக்கள் ஒருபோதும் கோவையை அ.தி.மு.க.வின் கோட்டை என சொல்லவில்லை. 

இனி எப்போதும் கோவை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

முன்னதாக தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் பொய் தகவல்களை கூறி தனக்கு சீட் கிடைக்காமல் செய்து விட்டார் என அமைச்சர் முன்னிலையில் மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மீனா ஜெயக்குமார் பேசினார். 

உடனே அங்கிருந்த சிலர் பேச்சை நிறுத்தக் கோரி கூச்சலிட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 

உடனே அமைச்சர் செந்தில்பாலாஜி தலையிட்டு, தனிப்பட்ட முறையில் பேச வேண்டாம், ஏதாவது புகார் இருந்தால் கடிதமாக கொடுங்கள், தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்ற சமரசம் செய்தார்.

Next Story