சிறுவாணி அணையின் நீர்மட்டம் 28 அடியாக குறைந்தது. ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 28 அடியாக குறைந்தது. ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
கோவை
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 28 அடியாக குறைந்தது. ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுவாணி அணை
கோவை மாநகரின் 30 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதார மாக சிறுவாணி அணை உள்ளது. இதுதவிர வழியோர கிராமங்களுக் கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் 45 அடியை எட்டியது.
49 அடி உயரம் கொண்ட அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்க கேரள அரசு அனுமதிப்பது இல்லை.
கேரளாவில் கடந்த ஆண்டு மழையால் நீர் வரத்து அதிகரித்து பெரும்பாலான அணைகள் நிரம்பின. அப்போது அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து வெளியேற்றப்பட்டது.
அதன்படி சிறுவாணி அணை யில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 42 அடிக்கும் கீழ் குறைந்தது.
அதன்பிறகு பெய்த மழையால் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது.
நீர்மட்டம் குறைந்தது
கோவையில் கடந்த 2 மாதங்களாக மழையின்றி வெயில் அடித்து வருகிறது. மேலும் அணையில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.
இதன்காரணமாக அணையின் நீர் மட்டம் 28 அடியாக சரிந்து உள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி அணையில் 39 அடி தண்ணீர் இருந்தது.
அது ஒரே மாதத்தில் 11 அடி அளவுக்கு குறைந்து 28 அடியாக தண்ணீர் உள்ளது. இதனால் அணை யில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது
மழைக்காலத்தில் சிறுவாணி அணையில் இருந்து தினமும் 97 எம்.எல்.டி. முதல் 103 எம்.எல்.டி. வரை தண்ணீர் எடுக்கப்பட்டது.
தற்போது அணையின் நீர் மட்டம் குறைந்து கோடை காலம் தொடங்கியதால் 28 அடியாக குறைந்து உள்ளது.
தட்டுப்பாடு ஏற்படாது
இதனால் அணையில் இருந்து தினமும் 60 எம்.எல்.டி. தண்ணீர் எடுக் கப்படுகிறது.
இதில் 53 எம்.எல்.டி. கோவை மாநகருக்கும் மீதமுள்ள குடிநீர் வழியோர கிராமங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆனாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அளவு குறைந் ததால் 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story