மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2022 8:46 PM IST (Updated: 26 Feb 2022 8:46 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபால்பட்டி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோபால்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி தலைமை தாங்கினார்.

திண்டுக்கல்-நத்தம் இடையே தரமான சாலை அமைக்க வேண்டும். அந்த சாலையில், கன்னியாபுரம் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்படுவதை நிறுத்த வேண்டும். கோணப்பட்டி அய்யனார் அணைக்கட்டு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கோபால்பட்டி அருகே செயல்படும் மாம்பழ கூழ் தொழிற்சாலை கழிவுகளை அகற்ற வேண்டும். கோபால்பட்டியில் மூடிக்கிடக்கும் பெண்கள் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ேகாஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதில் மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் வெள்ளைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story