சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் பிளஸ்2 மாணவி தற்கொலை
காரிமங்கலத்தில் சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் பிளஸ்2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
காரிமங்கலம்:
காரிமங்கலத்தில் சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிளஸ்-2 மாணவி
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருணேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் காஞ்சனா. தூய்மை பணியாளர். இவரது மகள் பேபி ஷாலினி (வயது 17). இவர் காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி சரிவர படிக்காமல் இருந்ததை அவரது தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். நீண்ட நேரமாகியும் மகள் வெளியே வராததால் காஞ்சனா சென்று பார்த்தார். அப்போது மகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர், மகளை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மாணவி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார், ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மாணவி பேபி ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story