ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு
ஆவடியில் ஆசிரியையிடம் 9 பவுன் நகையை பறித்துச்சென்றது அவருக்கு தெரிந்தது.
ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மேரி பிரேமா (வயது 59). இவர், ஆவடியை அடுத்த பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நேற்று காலை ஆசிரியை மேரி பிரேமா, பள்ளிக்கு செல்வதற்காக ஆவடி புதிய ராணுவ சாலையில் இருந்து பஜார் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ஆசிரியை மேரி பிரேமாவிடம், “இந்த வழியில் அதிகமாக வழிப்பறி நடக்கிறது. நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழற்றி பையில் வைத்து செல்லுங்கள்” என அதிகார தோணியில் பேசினர். இதனால் பயந்துபோன மேரி, தான் வைத்திருந்த வளையல், தங்க சங்கிலி என 9 பவுன் நகையை கழற்றி, பையில் வைத்தார். பின்னர் மர்மநபர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
சிறிதுநேரம் கழித்து மேரி பிரேமா, தனது பையை பார்த்தபோது அதில் வைத்து இருந்த 9 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் மர்மநபர்கள் இருவரும் தனது கவனத்தை திசை திருப்பி பையில் இருந்த 9 பவுன் நகையை பறித்துச்சென்றது அவருக்கு தெரிந்தது. இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story