காஞ்சீபுரத்தில் முத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் மீட்பு
காஞ்சீபுரத்தில் முத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் மீட்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள முத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான 2,142 சதுர அடி இடம் ரெயில்வே சாலையில் உள்ளது. இந்த இடத்தில் உள்ள ரூ.3 கோடி மதிப்புள்ள இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகையும் செலுத்தாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனையறிந்த காஞ்சீபுரம் சரக உதவி ஆணையர் முத்துரத்தினவேலு கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்குமாறு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோவில் நிலங்களுக்கான வட்டாட்சியர் வசந்தி ஆகியோர் ரூ.3 கோடி மதிப்பிலான இடத்தை மீட்பதற்காக வந்த போது சம்பந்தப்பட்ட வாடகைதாரர் அந்த இடத்தை பூட்டி அதன் சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதன் மூலம் ரூ.3 கோடி மதிப்பிலான முத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்து மீட்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story