மிட்டாய் வாங்க சென்ற 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
மணலூர்பேட்டை அருகே மிட்டாய் வாங்க சென்ற 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள திருவரங்கம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிலிங்கம் (வயது 58). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, பள்ளிக்கூடம் செல்வதற்காக ஜோதிலிங்கம் கடை முன்பு பள்ளி வேனுக்காக காத்திருந்தாள். இதற்கிடையே அந்த சிறுமி, மிட்டாய் வாங்குவதற்காக அவரது பெட்டிக்கடைக்கு சென்றார். அப்போது ஜோதிலிங்கம், சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கைது
இதில் வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அலறி துடித்தாள். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். இதுகுறித்து சிறுமியின் தாய், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இளவழகி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோதிலிங்கத்தை கைது செய்தார்.இந்த சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story