ஆன்லைன் மோசடி ரூ.4 லட்சம் மீட்பு


ஆன்லைன் மோசடி ரூ.4 லட்சம் மீட்பு
x
ஆன்லைன் மோசடி ரூ.4 லட்சம் மீட்பு
தினத்தந்தி 28 Feb 2022 10:01 PM IST (Updated: 28 Feb 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மோசடி ரூ.4 லட்சம் மீட்பு

கோவை

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணபிரபு (வயது 51). இவரை கடந்த 18-ந் தேதி அறிமுகம் இல்லாத ஒரு நபர் செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறியுள்ளார். அதை நம்பிய ராமகிருஷ்ண பிரபுவிடம் ரூ.2 லட்சத்தை ஆன்லைன் மூலம் அபகரித்துள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசார ணை நடத்தி ராமகிருஷ்ணபிரபுவிற்கு ரூ.1½ லட்சத்தை மீட்டு கொடுத்து உள்ளனர்.

இதேபோல வடவள்ளியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் நாராயணன் (77) என்பவர் தனது இ-மெயிலுக்கு வந்த லிங்கை கிளிக் செய்து, கிரெடிட் கார்டு விவரத்தை பதிவு செய்துள்ளார். அதை பயன்படுத்தி அவரு டைய கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபகரித்தனர். இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி முழு பணத்தையும் மீட்டு கொடுத்தனர். 

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீ தீபா. இவர், தனது கூகுள் பே எண்ணில் இருந்து வேறு ஒரு எண்ணிற்கு கூகுள் பே மூலம் ரூ.1 லட்சத்தை தவறுதலாக அனுப்பியதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரிடம் பணத்தை மீட்டு கொடுத்தார்.

அதேபோல பெரியநாயக்கன்பாளையம் மத்தம்பாளையத்தை சேர்ந்த வர் எஸ்தர் ராணி. இவருடைய போன் பே மூலம் பறிகொடுத்த ரூ.30 ஆயிரத்தை போலீசார் மீட்டு கொடுத்தனர்.

துடியலூர் நல்லாம்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், வங்கிக்கடன் பெற்று தருவதாகவும், அதற்கு முன் தொகையாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதை அவர் ரூ.19,500-யை முன்பணமாக செலுத்தினார்.

அதன்பிறகு குறுஞ்செய்தியில் இருந்த செல்போனை எண்ணை தொடர்பு கொண்டபோது எந்த தகவலும் இல்லை. இது குறித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ரூ.1000-ஐ மட்டும் மீட்டனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், சைபர் கிரைம் குறித்து www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் செய்யலாம். மேலும் அவசர உதவிக்கு 1930 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம் என்றனர்.

Next Story