வெயிலின் தாக்கம் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது


வெயிலின் தாக்கம் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
x
தினத்தந்தி 28 Feb 2022 10:12 PM IST (Updated: 28 Feb 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

வால்பாறை

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. 

வெயிலின் தாக்கம்

மலை பிரதேசமான வால்பாறையில் திரும்பிய இடங்கள் எல்லாம் தேயிலை எஸ்டேட்டுகள் இருப்பதால் பச்சை பசேலென காணப்படும். இதனால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்ைக அதிகமாக இருக்கும். 

ஆண்டுதோறும் பிப்ரவரி மாத கடைசியில்தான் வெயிலின் தாக்கம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு காலநிலை மாற்றம் காரணமாக பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

இதன் காரணமாக ஆறுகள், நீரோடைகள் உள்ளிட்ட நீர்நிலை கள் வறண்டன. சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் கூழாங்கல் ஆற்றிலும் தண்ணீர் குட்டை போன்று தேங்கி நிற்கிறது. தற்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்ததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 

குறிப்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து கூழாங்கல், நடுமலை ஆற்றில் குளிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆறுகள் தற்போது வறண்டுவிட்டதால் இங்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோடைமழை பெய்யவில்லை

வால்பாறையில் உள்ள தலைசிறந்த சுற்றுலா மையமான சோலையாறு அணையின் நீர்மட்டம் தற்போது மளமளவென குறைந்து 82 அடியாக உள்ளது. அதுபோன்று இந்த அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்து வினாடிக்கு 17 கனஅடி மட்டுமே வருகிறது. 

ஆண்டுதோறும் வால்பாறையில் பிப்ரவரி மாதத்தில் கோடை மழை பெய்யும். இதனால் இங்கு வெப்பத்தின் தாக்கம் குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டில் கோடைமழை பெய்யவில்லை. இதனால்தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 

எதிர்பார்ப்பு

மேலும் கடும் வெயில் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள சில எஸ்டேட்டில் தேயிலை செடிகளும் காய்ந்து வருகின்றன. அத்துடன் சில இடங்களில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த மாதமாவது கோடை மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story