கோவை பொள்ளாச்சி இடையே விபத்தை தடுக்க 4 வழிச்சாலையில் கோடு வரையும் பணி
கோவை பொள்ளாச்சி இடையே விபத்தை தடுக்க 4 வழிச்சாலையில் கோடு வரையும் பணி நடந்தது.
கிணத்துக்கடவு
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு கிணத்துக்கடவு வழியாக 4 வழிச்சாலை போடப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக செல்ல மஞ்சள் நிற கோடுகள் வரையப்பட்டு இருந்தன.
இந்த கோடுகள் வரைந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் பல இடங்களில் மஞ்சள் நிற கோடுகள் அழிந்தன. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் உள்ள சந்திப்பு பகுதி தெரியாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
எனவே இந்த விபத்துகள் நடப்பதை தடுக்க உடனடியாக மஞ்சள் நிற கோடுகளை போட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி தற்போது இந்த சாலையில் முக்கிய பகுதிகளில் எந்திரம் மூலம் மஞ்சள் நிற கோடுகள் வரையும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- இந்த சாலையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடந்து செல்ல வசதியாக 2½ கி.மீ. தூரத்துக்கு ஒரு இடைவெளி விடப்பட்டு, அந்த இடைவெளி குறித்து தெரிவதற்காக மஞ்சள் நிற கோடுகள் வரையப்பட்டு உள்ளன.
இந்த கோடுகள் அழிந்ததால், தற்போது மீண்டும் கோடுகள் போடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story