முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேடுகளை கண்டித்தும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த தி.மு.க.வின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.தாமோதரன், செல்விராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.எஸ்.அருள், சிவசுப்பிரமணியன், கலைச்செல்வன், மீனவரணி தங்கமணி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் முருகுமணி, பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர்
சி.கே.எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளர்கள் (தெற்கு) சொரத்தூர் ராஜேந்திரன், (மேற்கு) அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ., (கிழக்கு) கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-
பறிக்கப்பட்ட வெற்றி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தி.மு.க. பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்துள்ளது. அவர் மீது புகார் கொடுத்த நரேஷ்குமார் என்பவர் மீது 12 வழக்குகள் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி, அ.தி.மு.க.விடம் இருந்து பறிக்கப்பட்ட வெற்றி. கடலூர் மாநகராட்சி 45 வார்டுகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டது.
ஆனால் மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பு அறையின் சாவியை காணவில்லை என்கிறார்கள். இது பற்றி கலெக்டரிடம் கேட்டால், மனித தவறு நடந்து விட்டதாக கூறுகிறார். ஆகவே இந்த வெற்றி பறிக்கப்பட்ட வெற்றி. ஜனநாயக படுகொலை செய்து பெறப்பட்ட வெற்றி. ஆகவே தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி, ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட இணை செயலாளர் உமாமகேஸ்வரி பால கிருஷ்ணன், மாவட்ட வர்த்தக பிரிவு வரதராஜன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பால கிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தஷ்ணா, நகர துணை செயலாளர் கந்தன், இலக்கிய அணி ஏழுமலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு வெங்கட்ராமன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஏ.ஜி.எம். வினோத், சுரேஷ்பாபு உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story