தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
கூடலூர் செவிடிப்பேட்டை பகுதியில் சாலையோரம் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கால் நடைகள் உள்ளிட்ட விலங்குகள் கழிவுகளைத் தின்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்திறந்த வெளியில் குப்பை கொட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜோசப், கூடலூர்.
வீணாகும் குடிநீர்
கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து தலைமை தபால் நிலையம் செல்லும் சாலையில் நகராட்சி குடிநீர் குழாய் கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யும்போது குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் பலருக்கு சரியாக குடிநீர் கிடைப்பது இல்லை. எனவே பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே பழுதடைந்த குழாய்களை சீரமைக்க வேண்டும். இதேபோல் ஓவேலியிலும் குடிநீர் குழாய் பழுதாகி வீணாக செல்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பார்த்தீபன், கூடலூர்.
கொடிகள் படர்ந்த மின்கம்பம்
கோவை சத்தி சாலையில் அத்திப்பாளையம் பிரிவில் சிக்னல் உள்ளது. இந்த சிக்னலில் இருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் வாய்க்கால் பாலம் இருக்கிறது. இந்த பாலத்தை ஒட்டி உள்ள மின்விளக்கு கம்பியில் கீழிருந்து மேல் வரை கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்விளக்குகள் பழுதாகி ஒளிராமல் இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த மின்கம்பத்தில் படர்ந்து உள்ள கொடிகளை அகற்ற வேண்டும்.
சந்தோஷ், அத்திப்பாளையம் பிரிவு.
வெளிச்சத்தை மறைக்கும் மரக்கிளைகள்
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ஏராளமான மின்விளக்கு கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் பல இடங்களில் மின் விளக்குகளை மரக்கிளைகள் மறைப்பதால் வெளிச்சம் சரியாக தெரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வெளிச்சத்தை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.
ஜோதிமணி, மகாலிங்கபுரம்.
புதர்சூழ்ந்த மைதானம்
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் விளையாட மைதானமும் உள்ளது. ஆனால் இந்த மைதானம் புதர்மண்டி காணப்படுவதால் அங்கு விஷப்பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும்.
சந்தோஷ்குமார், பொள்ளாச்சி.
பராமரிக்கப்படாத பூங்கா
கோவை காந்திமாநகரில் திறந்தவெளி மைதானம் உள்ளது. இந்த மைதானத்துக்கு எதிரே மாநகராட்சி பூங்கா இருக்கிறது. இந்த பூங்கா சரிவர பராமரிக்கப்படுவது இல்லை. அத்துடன் அங்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இ்ல்லாததால் இங்கு செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் காவலாளி இல்லாததால் சில நேரத்தில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து மதுஅருந்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜோதிநாதன், காந்திமாநகர்.
இறைச்சி கழிவுகளால் அவதி
கோவை அருகே உள்ள இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு மயான பகுதியில் நீர்நிலை மற்றும் வழித்தடம், சாலை ஓரத்தில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் தொற்றுநோய் பரவக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுத்து இங்கு குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
மனோகரன், இடிகரை.
சாலை நடுவே மின்கம்பம்
சூலூர் அருேக உள்ள பள்ளபாளையம் பேரூராட்சி பாரதி நகர் துளசிதாசர் வீதி உள்ளது. இங்குள்ள 4 முக்கு சாலையில், ரோட்டின் நடுவே மின்கம்பம் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கிறது. அத்துடன் இந்த மின்கம்பத்தால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை நடுவே உள்ள இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
கணேசன், பாரதிநகர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை ராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் குப்பைகள் சரியாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் அங்கு குவிந்து கிடக்கிறது. அத்துடன் காற்று வேகமாக வீசும்போது பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் செல்வதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
கண்மணி, ராமநாதபுரம்.
Related Tags :
Next Story