பாரம்பரிய மண்ணிசை விழா கலைபோட்டி
ராமநாதபுரத்தில் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற மண்ணிசை விழா கலைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற மண்ணிசை விழா கலைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பாரம்பரிய கலைகள்
தமிழர்களின் பாரம்பரியமிக்க கலைகளை மாணவிகள் மற்றும் இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் நோக்கத்தில் கடந்த 24-ந் தேதி முதல் 5 நாட்கள் ராமநாதபுரம் டி.பிளாக் அம்மா பூங்காவில் எந்தவித கட்டணமின்றி மல்லர் கம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பாரம்பரிய கலைகளை கற்று தேர்ச்சி பெற்றனர்.
இந்த பயிற்சி முகாமினை பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சித்ராமருது, மண்டபம் யூனியன் கவுன்சிலர் மருதுபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட மல்லர் கம்பம் கழக தலைவர் அரு.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சரவணன் வரவேற்று பேசினார். இதில், விழுப்புரத்தை சேர்ந்த தேசிய பயிற்சியாளர் செல்வமொழியன், கபிலன், ஆகாஷ் மற்றும் தேசிய வீரர் நவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
பரிசு
இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் மண்ணிசை விழா ராமநாதபுரம் டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கிராமிய கலைகள் தப்பாட்டம், மரக்காலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால்குதிரை, ஒயிலாட்டம், பரதநாட்டியம், பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மல்லர் கம்பம் பயிற்சி நிறைவு விழா ராமநாதபுரம் அம்மா பூங்காவில் நடைபெற்றது.
ராமநாதபுரம் நேருயுவகேந்திரா மாவட்ட அலுவலர் பிரவின்குமார் தலைமை தாங்கி பரிசு, சான்றிதழ்களை வழங்கி பேசினார். முடிவில் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோக சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story