முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு
x
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு
தினத்தந்தி 1 March 2022 8:14 PM IST (Updated: 1 March 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் அ.தி.மு.க சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில் சட்டவிரோதமாக கூடியதாகவும், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாகவும்இவர்கள் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் புகார் செய்தார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அம்மன் கே.அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தாமோதரன், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி ஆகிய எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், புரட்சி தம்பி, லீலாவதி உண்ணி, முன்னாள் எம்.எல்.ஏ சின்னராஜ், சிங்கை ராமச்சந்திரன் உள்பட 14 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 341 (முறையற்று தடுப்பது), 269 (தொற்று நோய் தடுப்பு சட்டத்தை மீறுதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story