செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 650 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல்
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 650 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
சுல்தான்பேட்டை
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 650 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 11-ந்தேதி முதல் கொப்பரை கொள் முதல் தொடங்கியது.
இங்கு அரவை கொப்பரை கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்கள் கொப்பரையை விற்பனை செய்ய 390 பேர் பதிவு செய்து உள்ளனர். அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த கொப்பரை தேங்காய்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
650 மூட்டை கொள்முதல்
தற்போது காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள விற்பனை மையங்களை விட அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதல் விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் செஞ்சேரி, நெகமம் அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதன்படி செஞ்சேரி கொள்முதல் நிலையத்தில் இதுவரை 24 விவசாயிகளிடம் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட 650 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது
Related Tags :
Next Story