தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 2 March 2022 11:24 PM IST (Updated: 2 March 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

தடுப்பணையில் கோழி கழிவுகள்

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி பிரிவில் இருந்து செஞ்சேரிமலை செல்லும் வழியில் சிறு தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்றுவதுடன், தடுப்பணையில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிர்மல், சுல்தான்பேட்டை.

நிழற்குடை இல்லை

  நெகமம் நாகர் மைதானம் வழியாக டவுன் பஸ்கள் இயக்கப் படுகிறது. ஆனால் இங்குள்ள பஸ்நிறுத்தத்தில் பயணிகள் காத்திருக்க நிழற்குடை வசதி இல்லை. இங்கு நடக்கும் வாரச் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் வருவது உண்டு. அவர்கள் பஸ்சுக்காக இந்த பஸ்நிறுத்தத்தில் கால்கடுத்து காத்திருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. மேலும் வெயில் காலத்தில் நிழலை தேடி மரத்தடியை நோக்கி பயணிகள் ஓடுவதால் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாகர் மைதான பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்.
  தங்கராஜ், நெகமம்.

மாணவர்களை துரத்தும் நாய்கள்

  கோவை குனியமுத்தூர், குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள பள்ளி அருகே தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. சாலையில் ஹாயாக உலா வரும் நாய்கள், அந்த வழியாக நடந்து செல்லும் மாணவர்களை துரத்துகிறது. அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் பலர் கீழே விழுந்து காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. அத்துடன் இரவில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்லவும் பயமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கைஎடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
  ஹரோன், குனியமுத்தூர்.

கம்பி வசதி இல்லாத பஸ்

  கோவை காந்திபுரத்தில் இருந்து மலுமிச்சம்பட்டிக்கு 12ஜெ என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சின் படிக்கட்டில் ஏறும்போது பிடித்து ஏற வசதியாக கம்பிகள் இல்லை. இதனால் வயதானவர்கள் பஸ்சில் ஏற பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அதுபோன்று படிக்கட்டு அருகே உள்ள நீளமான கம்பி உடைந்து உள்ளது. இதனால் அதை பஸ்சுக்குள் நிற்கும் பயணிகள் பிடிக்கும்போது உடைந்து கீழே விழக்கூடிய நிலை நீடித்து வருகிறது. எனவே இந்த பஸ்சில் கம்பி வசதி செய்து கொடுக்க வேண்டும்.
  பூங்கோதை, மலுமிச்சம்பட்டி.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
மின்விளக்குகள் சரிசெய்யப்பட்டது

  கோவை அவினாசி ரோடு எல்.ஐ.சி. சிக்னலில் இருந்து பார்க் கேட் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை அலுவலகம் உள்ளது. இதன் அருகே இருக்கும் 2 வேகத்தடை பகுதியில் மின்விளக்குகள் பழுதானதால் ஒளிரவில்லை. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து பழுதை சரிசெய்ததால் தற்போது ஒளிர்ந்து வருகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  கணேசன், கோவை.
  
போக்குவரத்து நெரிசல்

  கோவை அவினாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் இருந்து மரக்கடைக்கு செல்லும் சோமசுந்தரா மில்ரோடு சாலையில் தினமும் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஒருவழி பாதையாக மாற்ற வழிவகை செய்ய வேண்டும்.
  சுரேஷ், காட்டூர்.

வேகத்தடை வேண்டும் 

  கோவை மாநகராட்சி 65-வது வார்டு சுங்கம் பகுதியில் கருணாநிதி நகரில் பள்ளி முதல் மாநகராட்சி அலுவலகம் வரை சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் இந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. மேலும் பள்ளி அருகே உள்ளதால் மாணவர்கள் பயத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
  எழிலன், கருணாநிதிநகர்.

சாக்கடை கால்வாயில் குப்பைகள் 

  கோவை சத்தி ரோடு அத்திப்பாளையம் பிரிவில் சாக்கடை பள்ளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கட்டைகள் மற்றும் குப்பை கள் அதிகளவில் அடைத்து இருக்கிறது. இதனால் சாக்கடை கழிவுநீர் சரியாக செல்வது இல்லை. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், சிக்னல் பகுதியில் காத்து நிற்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு அடைத்து உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.

தெருநாய்கள் தொல்லை

  கோவை மாநகராட்சி 63-வது வார்டு கள்ளிமடை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தை கள், முதியோர் தனியாக நடந்து செல்ல முடிவது இல்லை. குறிப்பாக ராஜவீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
  மீனாட்சி சுந்தரம், கள்ளிமடை.

ஒளிராத மின்விளக்குகள்

  கோவை டெக்ஸ்டூல் மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 2 விளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
  கண்ணபிரான், கணபதி.


Next Story