மகனை கொலை செய்த குற்றவாளிகளை கோர்ட்டு வளாகத்தில் கொல்ல முயன்ற முதியவர் கைது


மகனை கொலை செய்த குற்றவாளிகளை கோர்ட்டு வளாகத்தில் கொல்ல முயன்ற முதியவர் கைது
x
தினத்தந்தி 3 March 2022 3:26 PM IST (Updated: 3 March 2022 3:26 PM IST)
t-max-icont-min-icon

மகனை கொலை செய்த குற்றவாளிகளை கோர்ட்டு வளாகத்தில் கொல்ல கத்தியுடன் பதுங்கியிருந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை சூளைமேடு பெரியார் பாதை பகுதியை சேர்ந்தவர், உதயகனி(வயது 60). இவரது மகன் ஆண்டனி உபால்ட் என்பவர், கடந்த 2020-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அய்யப்பன், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உதயகனி கையில் கத்தியுடனேயே அலைந்துள்ளார்.

குற்றவாளிகள் கார்த்திக், அய்யப்பன் ஆகிய இருவரையும் நேற்று பெரியமேடு அல்லிக்குளம் பகுதியில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அங்கு கத்தியுடன் பதுங்கியிருந்த உதயகனி குற்றவாளிகளான கார்த்திக், அய்யப்பன் ஆகியோரை குத்துவதற்கு பாய்ந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புக்காக வந்த போலீசார் உதயகனியை மடக்கி பிடித்தனர். கோர்ட்டு வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்ட உதயகனி பெரியமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story