காஞ்சீபுர மாவட்ட ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு


காஞ்சீபுர மாவட்ட ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2022 5:22 PM IST (Updated: 3 March 2022 5:22 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட சிட்டியம்பாக்கம் கிராமம் போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட ஏகனாம்பேட்டை கிராமம், காஞ்சீபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட சிட்டியம்பாக்கம் கிராமம் போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்களை பார்வையிட்டும் அவற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ரேஷன்கடையில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தரமானதாகவும், சரியான அளவிலும், வினியோகிக்க வேண்டுமென ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 

ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்து சென்ற மாதத்தில் வாங்கிய பொருட்களின் விவரங்களை கேட்டு, கடை எந்திரங்களில் பதிவான விவரங்களுடன் ஒப்பிட்டு சரி பார்த்தார். ஆய்வின்போது வாலாஜாபாத் வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story