திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வருகிற 5-ந் தேதி மின்தடை


திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வருகிற 5-ந் தேதி மின்தடை
x
தினத்தந்தி 3 March 2022 8:17 PM IST (Updated: 3 March 2022 8:17 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வருகிற 5-ந் தேதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூரில் உள்ள துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கும். அந்த சமயத்தில் திருவள்ளூர் நகரத்திலுள்ள ஜே.என்.சாலை (ரெயில் நிலையம் முதல் எல்.ஐ.சி. வரை) பூங்கா நகர், ஐ.ஆர்.என்.பின்புறம், எஸ்.பி.ஆபிஸ் பின்புறம், சேலை, ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிகுப்பம், பாப்பரம்பாக்கம், ராமஞ்சேரி, கீழ்நல்லாத்தூர், இலுப்பூர், கொப்பூர், பாண்டூர், பட்டரைப் பெருமந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சார தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story