வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 4 March 2022 4:15 PM IST (Updated: 4 March 2022 4:15 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் வி.சோமசுந்தரம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுமதி லோகநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் இருதய நோய், சிறுநீரக நோய், காது, மூக்கு, தொண்டை பிரிவு, பெண்கள் சிறப்பு பிரிவு, கண் மருத்துவம், குழந்தை சிறப்பு பிரிவு, தோல் நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. 

முகாமில் பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதில், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் ஆராமுதன், ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story