வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு


வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
x
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
தினத்தந்தி 4 March 2022 10:26 PM IST (Updated: 4 March 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

கோவை

கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில், வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. 6 வார்டுகளில் தி.மு.க.வும், ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்று இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தலுக்கு அ.தி.மு.க.வார்டு உறுப்பினர்கள் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றனர்.

அப்போது அவர்களின் வாகனம் அடித்துநொறுக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது.
தேர்தல் நடைபெற்ற பேரூராட்சி அலுவலகத்துக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
வாக்குப்பெட்டி தூக்கி வீசப்பட்டது

மாலையில் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் தி.மு.க-அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குப்பெட்டி வெளியில் தூக்கி வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து துணைத்தலைவர் தேர்தலும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலின் போது ஏற்பட்ட தகராறை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. காலை முதல் மாலைவரை அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story