கோட்டூர் உச்சி மாகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு
கோட்டூர் உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி வழிப்பட்டனர்.
பொள்ளாச்சி
கோட்டூர் உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி வழிப்பட்டனர்.
உச்சிமாகாளியம்மன் கோவில்
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டிணத்தில் உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 23-ந் தேதி கொடியேற்று விழா நடந்தது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
கடந்த 1-ந் தேதி சக்தி கும்பஸ்தானம், 2-ந் தேதி காலை முதல் மாலை வரை கோவிலுக்கு பக்தர்கள் மாவிளக்கு, பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பகல் 11 மணி அம்மன் திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குண்டம் திருவிழா
இதை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 57 அடி நீள குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது. குண்டத்தில் கோவில் பூசாரி முதலில் பூப்பந்தை உருட்டி விட்டார். அதை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.
அப்போது தாயே மாகாளி என்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். குண்டம் விழாவையொட்டி கோட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேரோட்ட நிகழ்ச்சி
இதை தொடர்ந்து தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை மாலை 7 மணிக்கு தேர் நிலை சேர்தல், பாரி வேட்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வருகிற 11-ந் தேதி பகல் 3 மணி முதல் மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story