மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோலப்போட்டி


மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோலப்போட்டி
x
தினத்தந்தி 5 March 2022 9:17 PM IST (Updated: 5 March 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோலப்போட்டி நடந்தது.

கோவை

பெண்களை போற்றும் விதமாகவும், அவர்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. 

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் மகளிர் குழுக்களுக்கு கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி உள்பட 5 வகையான போட்டிகள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கான போட்டிகள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடந்தது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
உணவு மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த கோலப்போட்டிகளில் பங்கேற்றவர்களில் பலர் காய்கறிகளைக் கொண்டும், தானியங்களைக் கொண்டும் கோலமிட்டு அசத்தினர். 

வட்டார அளவில் முதல் இடம் பிடித்த 250-க்கும் மேற்பட்டோர் நேற்று போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்தவர்கள் நாளை (இன்று) சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்வார்கள். 

அங்கு வெற்றி பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story