பொள்ளாச்சி பழனி இடையே ரெயில்வே மின்பாைத அமைக்கும் பணி நிறைவு
பொள்ளாச்சி பழனி இடையே ரெயில்வே மின்பாைத அமைக்கும் பணி நிறைவு பொள்ளாச்சி பழனி இடையே ரெயில்வே மின்பாைத அமைக்கும் பணி நிறைவு
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு முதல் திண்டுக்கல் வரையிலான ரெயில் பாதை முன்பு மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்தது. அதன் பிறகு இந்த ரெயில் பாதை அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்டு, 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது உடுமலை வழியாக திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடுசென்னை எக்ஸ்பிரஸ், பாலக்காடுதிருச்செந்தூர் ரெயில், கோவைமதுரை ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உடுமலை வழியாக பாலக்காடு-திண்டுக்கல் இடையிலான ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடந்து வந்தன. இதில் பழனி முதல் உடுமலை வழியாக பொள்ளாச்சி வரை உள்ள ரெயில் நிலையங்களுக்கிடையே 63 கி.மீ.தூரத்திற்கு ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் பெங்களூரு நேற்று வந்திருந்தார். அவர் காலை 8.30 மணிக்கு பழனியில் இருந்து சிறப்பு ஆய்வு ரெயிலில் புறப்பட்டார்.வழியில் பழனி தாலுகாவில் உள்ள சண்முகநதி ஆற்றுப்பாலம், புஷ்பத்தூர் அருகே ரெயில் பாதைக்கு மேலே குறுக்கிடும் மின் வழித்தடம், மயிலாபுரம் வயலூர் ரெயில்வே கேட், மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி ரோடு உப மின் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலை
அங்கிருந்து புறப்பட்டு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்தார்.உடுமலை ரெயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின்பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த அவர் ரெயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் மின் ரெயில் பாதைப் பணி பாதுகாப்பு விதிகளை முறையாக அறிந்துள்ளார்களா என்று சோதித்து ஆய்வு செய்தார். மின்சார ரெயில்களை இயக்குவதற்கு 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படுவதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மின்சார கம்பிகளைத்தொடவோ,
நெருங்கவோ வேண்டாம் என்ற எச்சரிக்கை விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். உடுமலை மற்றும் கோமங்கலம் ரெயில் நிலையங்களில்ஏற்படுத்தப்பட்டுள்ள மின்பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் அவருடன் முதன்மை மின் பொறியாளர் ஆர்.கே.மேத்தா, முதன்மை மின்மயமாக்கல் திட்ட இயக்குனர் சமீர்டிஹே, தென்னக ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர். உடுமலை மற்றும் கோமங்கலத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு சென்ற அவர் அங்கு 12.45 மணிக்கு ஆய்வை முடித்துக்கொண்டு, அங்கிருந்து பாலக்காடு ரெயில்வே பிரிவில் ஆய்வைத் தொடர்ந்தார்.
Related Tags :
Next Story