காஞ்சீபுரத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்
காஞ்சீபுரத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (Group II/IIA) போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் பயிற்சி பெற்று, தேர்ச்சி அடைந்து, பணியமர்த்தப்பட்டவர்களுக்கு நினைவு பரிசுகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) அனிதா, வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர்் அருணகிரி மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story