திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரெயில் நிலையம் பயன்பாட்டுக்கு தயார்
திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம் மற்றும் விம்கோநகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலைய கட்டுமான பணிகள் முடிந்துவிட்டதால் இன்னும் ஓரிரு நாட்களில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3,770 கோடியில் மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணிகள் நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார்.
கட்டுமான பணிகள் நிறைவடையாததால் இந்த பாதையில் உள்ள திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம் திறக்கப்படவில்லை. எனவே இந்த மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள், கடந்த ஒரு ஆண்டாக தேரடி ரெயில் நிலையத்துக்கு முன்பு உள்ள காலடிப்பேட்டை அல்லது இதற்கு அடுத்து உள்ள திருவொற்றியூர் ரெயில் நிலையங்களில் இறங்கி மாற்று போக்குவரத்து மூலம் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்தை சிரமத்துடன் அடைகின்றனர்.
எனவே விரைவில் இந்த ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பணிகள் நிறைவு செய்து திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவை கட்டுமான பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தயாராக உள்ளது. கடந்த மாதம் 18-ந்தேதி மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார் ராய் குழுவினருடன் வந்து இந்த 2 ரெயில் நிலையங்களையும் ஆய்வு செய்து விட்டு சென்றார்.
பயணிகளை பாதுகாப்பான முறையில் கையாளுவதற்கு உகந்த வகையில் ரெயில் நிலையம் கட்டுமானம் இருக்கிறது. எனவே பயணிகள் ரெயிலை இந்த ரெயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லலாம் என்று முறையாக பாதுகாப்பு கமிஷனர் சான்றிதழ் அளிப்பார்.
ஓரிரு நாட்களில்...
அவ்வாறு அளிக்கும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் பயணிகள் பயன்பாட்டுக்காக திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் நின்று செல்லும். அதேபோல், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையமும் திறக்கப்பட இருக்கிறது.
வண்ணாரப்பேட்டை- விம்கோநகர் வழிப்பாதையை திறந்து வைக்கும் போதே இந்த ரெயில் நிலையங்கள் உள்பட அனைத்து ரெயில் நிலையங்களையும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துவிட்டதால் இந்த மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு என்று தனியாக திறப்பு விழா நடத்தும் திட்டம் இல்லை. மாறாக பயணிகள் பயனடையும் வகையில் ரெயில்கள் நின்று செல்லும் வகையில் உரிய நடவடிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story