கோவை கோர்ட்டில் 2 பேர் சரண்


கோவை கோர்ட்டில் 2 பேர் சரண்
x
தினத்தந்தி 9 March 2022 9:27 PM IST (Updated: 9 March 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

கோவை கோர்ட்டில் 2 பேர் சரண்

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 28). இவர் சாய்பாபாகாலனி தக்காளி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு ராம்குமார் ஆர்.எஸ்.புரம் ராயப்பபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென அவரிடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர்கள், ராம்குமாரை கத்தியால் குத்தி மிரட்டி விட்டு சென்றனர். இதில் ராம்குமாருக்கு வயிறு மற்றும் கையில் கத்திக்குத்து விழுந்தது. அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்திக்குத்தில் ஈடுபட்ட பெரியகடை வீதி டி.கே. தெருவை சேர்ந்த பிரகாஷ்(23) என்பவரை கைது செய்தனர்.மேலும் தினேஷ்குமார்(25), அரவிந்த் குமார்(27) ஆகிய 2 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் கோவை 1-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story