பூந்தமல்லி அருகே ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு
பூந்தமல்லி அருகே ரூ.5 கோடி அரசு நிலத்தை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர்.
பூந்தமல்லி ஒன்றியம், அகரமேல் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் மூக்குத்தி குளம் இருந்து வந்தது. சுமார் 40 சென்ட் அளவு கொண்ட இந்த குளத்தை காலப்போக்கில் சிலர் மண்ணை கொட்டி மூடி ஆக்கிரமித்து விட்டனர். இந்த குளம் இருந்ததற்கான அடையாளம் தெரியாமல் அதனை சுற்றிலும் வீட்டு மனை பிரிவுகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 40 சென்ட் குளத்தை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர். தற்போது அந்த பகுதி முழுவதும் பள்ளம் தோண்டி நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story