கடை உரிமையாளர் உள்பட 2 பேரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது
கடை உரிமையாளர் உள்பட 2 பேரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது
கோவை
கடை உரிமையாளர் உள்பட 2 பேரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது
கடை உரிமையாளர்
கோவை ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச் ரோடு பால் பண்ணையை சேர்ந் தவர் கிசான் கனேரியா (வயது 27). ஹார்டுவேர் கடை உரிமை யாளர்.
இவர் இணையதளத்தில் எலக்ட்ரிக்கல் பொருட்களை விற்பதற்கு டீலர் எடுக்க முயற்சி செய்து வந்தார்.
இந்தநிலையில் அவரது செல்போனில் பேசிய நபர், தான் கூறும் வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்து 69 ஆயிரத்து 500 செலுத்தினால் டீலர்ஷிப் தருவதாக கூறினார்.
அதை நம்பிய கிசான்கனேரியா ரூ.4 லட்சத்து 69 ஆயிரத்து 500-ஐ செல்போனில் பேசிய நபர் கொடுத்த வங்கி கணக்கில் செலுத்தினார். அதற்கு பிறகு அந்த நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது.
இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரூ.7¼ லட்சம் மோசடி
இதேபோல் கோவை பீளமேடு மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 57). தொழில் அதிபர். இவர் தனது கிரெடிட் கார்டை ரத்து செய்ய வாடிக்கையாளர் சேவை எண்ணை இணையதளத்தில் தேடினார்.
அப்போது வங்கி வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கிருஷ்ணமூர்த்தியின் செல்போனில் பேசினார். அவரிடம், கிருஷ்ணமூர்த்தி தனது கிரெடிட் கார்டை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
உடனே அந்த நபர் ஒரு செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து உங்களது கிரெடிட், டெபிட் கார்ட்டு விவரங்களை பதிவிட்டு, செல்போன் ஓ.டி.பி. எண் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதே போல் கிருஷ்ணமூர்த்தி செய்த உடன் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவையில் 2 பேரிடம் ஆன்லைன் முறையில் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது. கோவையில் ஆன்லைன் முறையில் மோசடி செய்யும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
புகார் தெரிவிக்கலாம்
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும் போது, சைபர் கிரைம் மோசடி நடந்தால் 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ள லாம்.
மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும், 0422- 2200383 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.
Related Tags :
Next Story