சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவை
சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து மாநில பொதுசெயலாளர் திருச்செல்வன் கூறியதாவது
டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 18 ஆண்டுகளாக பணியிட மாறுதல் கேட்டு வருகிறோம். ஆனால் விதிகளை மீறி முறைகேடாக சிலருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.
அதை ரத்து செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுக்கு செய்த செலவுகளை டாஸ்மாக் நிர்வாகம் இதுவரை தரவில்லை.
ரூ.1,361 கோடி கடன் மற்றும் நஷ்டத் தில் இயங்குவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
டாஸ்மாக் நிர்வாகத்தில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ஜான் அந்தோணி ராஜ், பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் செந்தில் பிரபு, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story