மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மாநகர பஸ் கண்டக்டர்கள் 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சென்னை மாநகர பஸ் கண்டக்டர்கள் 2 பேர் பலியானார்கள்.
பஸ் கண்டக்டர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா, தச்சூர், சாந்தமங்களம் பகுதியில் வசித்து வந்தவர் நந்தகோபன் (வயது 55). இவர், சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள மாநகர பஸ் பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
இதேபோல் திருக்கழுக்குன்றம் அடுத்த நரப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ஜோதிபிரகாஷ் (45). இவரும், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மாநகர பஸ் பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
விபத்து
இவர்கள் 2 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். செங்கல்பட்டில் மேம்பாலத்தின் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கண்டக்டர்கள் நந்தகோபன் மற்றும் ஜோதி பிரகாஷ் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்து தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story