பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வருகிற 17-ந் தேதி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி, பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடக்கு வட்டார வளமைய அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இதற்கு பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர்(பொறுப்பு) ஸ்வப்னா முன்னிலை வகித்தார்.
பேரணியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டார வளமையத்தில் நிறைவடைந்தது. மேலும் மருத்துவ முகாம் குறித்த துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர், வடக்கு, தெற்கு ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story