பச்சை தேயிலை மகசூல் பாதிப்பு
வால்பாறையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறை
வால்பாறையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது.
வெயில் தாக்கம்
வால்பாறையில் கடந்த ஜனவரி மாதத்தின் 3-வது வாரத்தில் இருந்தே வெயில் அதிகரித்து வந்தது. ஆனாலும் அவ்வப்போது பனிப்பொழிவும் இருந்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. அதன்பின்னர் பனிப்பொழிவு குறைந்ததும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தற்போது வால்பாறையில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் கூழாங்கல் ஆறு, வெள்ளமலை ஆறு, நடுமலை ஆறு, கருமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு போக தொடங்கி விட்டது. மேலும் வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து இல்லை.
வறட்சி
இது தவிர வனப்பகுதிக்குள் முகாமிட்டு இருந்த காட்டுயானைகள் கேரள வனப்பகுதி களுக்கு செல்ல தொடங்கிவிட்டன. தேயிலை செடிகள் கருகி வருகிறது. இதனால் எஸ்டேட் நிர்வாகங்கள் வறட்சியில் இருந்து தேயிலை செடிகளை காப்பாற்ற தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோடை வறட்சி மற்றும் பூச்சி தாக்குதல் ஆகிய காரணங்களால் பச்சை தேயிலை மகசூல் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கோடைமழை கிடைக்கவில்லையெனில் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story