மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுவதால் கோவை உக்கடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுவதால் கோவை உக்கடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
கோவை
மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுவதால் கோவை உக்கடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
உக்கடம் மேம்பாலம்
கோவை உக்கடம் பஸ்நிலையம் முதல் கரும்புக்கடை சந்திப்பு வரை முதல் கட்ட மேம்பாலம் கட்டும் பணி ஏற்கனவே முடிவடைந்து விட்டது.
இதையடுத்து கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரை 2-வது கட்டமாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு நிலம் கையகப்படுத்த ரூ.70 கோடியும், 4 வழிச்சாலையுடன் மேம்பாலம் அமைக்க ரூ.170 கோடியும் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இதில் உக்கடம் - பெரியகுளம் பைபாஸ் சாலை பகுதியில் ஏறும் வழி, இறங்கும் வழி 623 மீட்டர் பரப்பளவிலும், ஆத்துப்பாலம் பகுதியில் ஏறும் வழி, இறங்கும் வழி 2 கிலோ மீட்டர் நீளத்திலும் அமைக்கப்படு கிறது.
மேம்பால பணிகள் மந்தம்
2-ம் கட்ட மேம்பால பணிகள் தற்போது வரை 25 சதவீதம் அளவுக்கு தான் நிறைவு பெற்றுள்ளது. மேம்பால பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். ஆனால் மேம்பால பணிகள் மந்தநிலையில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக உக்கடம் பஸ்நிலைய பகுதியில் உயர் அழுத்த மின்சார வயர்களை பூமிக்குள் பதித்து, மேம்பால இணைப்பு பணிகள் இன்னும் நடைபெறவில்லை. இதற்காக ரூ.16 கோடி செலவிலான பணிகள் அரைகுறையாக உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
மேம்பால பணிகள் முடிவடையாததால் உக்கடம் பஸ்நிலையத்தில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இதன் காரணமாக நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகிறார்கள்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, மேம்பா லத்துக்கு சாரம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்ததும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.
Related Tags :
Next Story