தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
சேதமடைந்த இருக்கைகள்
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இங்கு போடப்பட்டுள்ள இரும்பிலான இருக்கைகள் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இதில் அமரும் பொதுமக்களுக்கு, காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய இருக்கைகள் அமைக்க மாநகராட்சி முன்வர வேண்டும்.
செந்தில், சிங்காநல்லூர்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
குடிநீர் வினியோகம் சீரானது
கோவையை அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் மாதத்துக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
ரஜினி செந்தில், பாப்பம்பட்டி.
கூடுதல் பஸ்கள் வேண்டும்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதற்காக அவர்கள் பொள்ளாச்சி வந்து பின்னர் அங்கிருந்து ஆனைமலைக்கு செல்கிறார்கள். ஆனால் பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் வாடகை கார்களில் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து ஆனைமலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
எஸ்.அபிஷேக்குரு, பொள்ளாச்சி.
பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் பெரியார் காலனி உள்ளது. இங்குள்ள கட்டண கழிப்பிடம் போதிய பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. முறையாக சுத்தம் செய்யப்படாததால் செப்டிக் டேங் நிரம்பி வழிவதால் அதிகளவில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
ஜெயராம், பொள்ளாச்சி.
வேகத்தடை அமைக்கப்படுமா?
கோவை சரவணம்பட்டியில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில் முனியப்பன் கோவில் பஸ் நிறுத்தத்தில் 2 வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது வேகத்தடை இல்லை. இந்த பகுதி 4 சந்திப்பு என்பதால் அதிகளவில் வாகனங்கள் வந்து செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும்.
விஜய், விளாங்குறிச்சி.
மின்விளக்குகள் இல்லை
கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் இருந்து கருவலூர் செல்லும் சாலையில் தேவம்பாளையம் முதல் பொன்னே கவுண்டன்புதூர் வரை சாலையில் மின்விளக்குகள் வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் இங்கு இருள் சூழ்ந்து இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இங்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.
ராஜாகண்ணு, கோவில்பாளையம்.
கனிவுடன் பேசுவார்களா?
கோவை சிங்காநல்லூரில் இயங்கி வரும் தபால் நிலையத்துக்கு சென்றால் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் வாடிக்கை யாளரிடம் கனிவாக பேசுவது இல்லை. சந்தேகம் கேட்டாலும் முறையாக பதில் அளிப்பது கிடையாது. இதனால் இங்கு செல்லும் பொதுமக்கள் எவ்வித தகவலும் தெரிந்து கொள்ள முமடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கனிவாக நடந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
சக்தி,சிங்காநல்லூர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை கணபதி மாநகரில் உள்ள பண்ணாரியம்மன் கோவில் அருகே எஸ்.ஆர்.வ.நகர் சந்திப்பில் குப்பை தொட்டி முறையாக வைக்கப்படாதால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அவற்றை சரியாகவும் சுத்தம் செய்வது இல்லை. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு குவிந்து இருக்கும் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.
ராகவராஜா மணிகண்டன், கணபதிமாநகர்.
போக்குவரத்துக்கு இடையூறு
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள புதுபாலம் முதல் மின்மயானம் வரை சாைலயின் இருபுறத்திலும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
முத்துகுமார், கோவை.
Related Tags :
Next Story