ஜக்கார்பாளையம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்
ஜக்கார்பாளையம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நெகமம்
நெகமம் அருகே ஜக்கார்பாளையத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மகளிர் தின விழாவையொட்டி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவிகள் எப்போதும் துணிச்சல் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். யாராவது போன் செய்து ஏதாவது கேட்டால் உரிய பதில் தரவேண்டும். தவறான பதில் கேட்டால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story