பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா


பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா
x
தினத்தந்தி 12 March 2022 7:08 PM IST (Updated: 12 March 2022 7:08 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். 

மாரியம்மன் கோவில்

பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளித்தேர் திருவிழா கடந்த 15-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது. கடந்த 1-ந்தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்பட்டது. 5-ந்தேதி காலை 10 மணிக்கு கோவிலில் கொடியேற்று விழா நடந்தது.
9-ந்தேதி காலை 6 மணிக்கு கோவிலுக்கு பக்தர்கள் மா விளக்கு எடுத்து வருதல், காலை 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 8.50 மணிக்கு முதல் நாள் தேர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு வெங்கட்ரமணன் வீதியில் இமான்கான் வீதி சந்திப்பை அடைந்தது. பின்னர் 10-ந்தேதி 2-ம் நாள் தேர் புறப்பட்டு சத்திரம் வீதியை வந்தடைந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 3-ம் நாள் தேர் புறப்பட்டு, 11 மணிக்கு கோவிலை வந்தடைந்தது.

தெப்பத்தேர் விழா

அதை தொடர்ந்து பாாிவேட்டை நடைபெற்றது. இதையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு தெப்பத்தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டன. அம்மன் தெப்பத்தேர்லில் வீற்றிருந்தார். மேள, தாளத்துடன் அம்மன் தெப்பத்தேரை 3 முறை சுற்றி வந்தார்.
பக்தர்கள் தெப்பத்தேரை பார்க்கும் வகையில் பெரிய திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு மகாஅபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

Next Story