கோவையில் 24-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது
கோவையில் 24-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது
கோவை
கோவையில் 24-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கிராமப்புறங்களில் 446 மையங்கள், மாநகராட்சி பகுதி யில் 215 மையங்கள் என மொத்தம் 661 மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், 2 டோஸ் செலுத்தி 9 மாதங்கள் நிறை வடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு மருத்து வமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தி கொள் ளாதவர்கள் முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
முகாமிற்கு வரும் போது பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story