பொள்ளாச்சியில் மக்கள் நீதிமன்றம் மூலம் 132 வழக்குகளுக்கு தீர்வு
பொள்ளாச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 132 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 132 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குளை குறைக்கும் வகையில் தேசிய லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெறும். பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் கோவை மாவட்ட நீதிபதி பாபு தலைமை தாங்கினார். இதில் சப்-கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) செல்லத்துரை, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுபாஷினி, ஜே.எம். 2 நீதிபதி செல்லையா, வக்கீல்கள் சங்க தலைவர் துரை, வக்கீல்கள் கணேஷ், மனோகர், பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சமரச தீர்வு
மோட்டார் வாகன விபத்துக்கள் 63 விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 14 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.71 லட்சத்து 65 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. காசோலை மோசடி வழக்குகள் 25 எடுத்துக் கொள்ளப்பட்டு 2 வழக்குகளுக்கும், போக்குவரத்து விதிமுறை மீறல் உள்பட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதில் சப்-கோர்ட்டு, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் முதன்மை உரிமையியல் நீதிமன்றம், ஜே.எம். 1, ஜே.எம்.2 ஆகிய கோர்ட்டுகளில் உள்ள வழக்குகள் 1010 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 132 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடியே 45 லட்சத்து 65 ஆயிரத்துக்கு 772-க்கு சமரசம் செய்யப்பட்டது.
வால்பாறை
இதேபோல் வால்பாறையில் நடந்த மக்கள் நீதிமன்றதிற்கு வால்பாறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா தலைமை தாங்கினார். மக்கள் நீதிமன்ற விசாரணைக்கு தீர்வு காணப்பட வேண்டிய வழக்குகளில் தொடர்புடைய 92 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 78 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.
காசோலை வழக்கில் ரூ1 லட்சத்து 25 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. எஸ்டேட் தொழிலாளர்கள் சார்ந்த வழக்கில் நிர்வாகத்திடமிருந்து ரூ.6 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.போலீசார் சார்பில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகன வழக்கு, சட்ட விரோத மது விற்பனை வழக்கு ஆகிய வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூபாய் 69 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.பணம் கொடுக்கல் வாங்கல் வழக்கில் ரூ.1 லட்சத்தி 64 ஆயிரத்தி 409 வசூல் செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் ரூ.3 லட்சத்தி 65 ஆயிரத்து 799 வசூல் செய்யப்பட்டது.
இதில், வட்ட சட்ட பணிகள் குழு உறுப்பினர் வக்கீல் விஸ்வநாதன், வக்கில்கள் முத்துசாமி, பெருமாள், முருகன், சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story