மேலச்சேரி நீரேற்று நிலையத்தில் தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆய்வு


மேலச்சேரி நீரேற்று நிலையத்தில் தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆய்வு
x
தினத்தந்தி 13 March 2022 4:11 PM IST (Updated: 13 March 2022 4:11 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலச்சேரி நீரேற்று நிலையத்தில் தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆய்வு செய்தனர்.

கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான மேலச்சேரி, வில்லியம்பாக்கம் தலைமை நீரேற்று நிலையத்தில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, வரும் கோடைகாலத்தை குடிநீர் பற்றாக்குறை இன்றி சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர். அப்போது மாநகராட்சி என்ஜினீயர் ஆனந்தஜோதி, உதவி என்ஜினீயர் பிரதாப்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story