தக்காளி கிலோ ரூ.4-க்கு விற்பனை


தக்காளி கிலோ ரூ.4-க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 March 2022 9:52 PM IST (Updated: 13 March 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.4-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.4-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

காய்கறி விவசாயம்

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இதில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளையும் காய்கறிகளை கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். அங்கு காய்கறிகள் ஏலம் விடப்படுகிறது.

இந்த நிலையில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடுமையான வெயில் வாட்டி எடுத்தாலும், தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி, வெண்டைக்காய், பச்சை மிளகாய், கத்தரிக்காய், முள்ளங்கி, அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. ஆனால் அந்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தக்காளி ஏலம்

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் தக்காளி ஒரு கிலோ 4 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 6 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட ஒரு கிலோவிற்கு 2 ரூபாய் குறைவாக ஏலம் போனதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 

இதேபோன்று ஒரு கிலோ அவரைக்காய் 10 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 6 ரூபாய்க்கும், பொரியல் தட்டை 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 10 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 45 ரூபாய்க்கும், முள்ளங்கி 10 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 30 ரூபாய்க்கும் ஏலம் போனது. 

குறைந்தபட்ச விலை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடுமையான வெயில் சுட்டெரிக்கும் காலத்திலும் வட தோட்டத்தில் இருந்து காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறோம். இங்கு மிக குறைந்த விலையில் காய்கறி விற்பனை ஆகிறது. 

இதனால் காய்கறிகளை பறித்து, வாகனங்களில் ஏற்றி, சந்தைக்கு கொண்டு வரும் செலவுக்கு கூட கட்டுப்படி ஆகாமல் உள்ளது. எனவே தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story