புதிய ரேஷன் கடை திறக்கப்படுவது எப்போது?


புதிய ரேஷன் கடை திறக்கப்படுவது எப்போது?
x
தினத்தந்தி 13 March 2022 9:53 PM IST (Updated: 13 March 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

சின்னேரிபாளையத்தில் புதிய ரேஷன் கடை திறக்கப்படுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நெகமம்

சின்னேரிபாளையத்தில் புதிய ரேஷன் கடை திறக்கப்படுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இடவசதி இல்லை

நெகமம் அருகே உள்ள சின்னேரிபாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மானிய விலையில் அரசு வழங்கும் அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. ஆனால் வாடகை கட்டிடத்திலேயே செயல்படுகிறது. அங்கு போதிய இடவசதி இல்லை. இதனால் ரேஷன் பொருட்களை இருப்பு வைக்க முடியவில்லை. இதன் காரணமாக ஊழியர்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதிய கட்டிடம்

இதை ஏற்று பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கி, ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் ரேஷன் கடை தொடர்ந்து வாடகை கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமூக விரோத செயல்கள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் இ்ல்லை. புதிதாக கட்டப்பட்ட கட்டிடமும் திறக்கப்படவில்லை. வாடகை கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் ரேஷன் பொருட்களை இருப்பு வைக்க முடியாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர். புதிய கட்டிடம் கட்டப்பட்டு, நீண்ட நாட்கள் ஆகியும் திறக்கப்படாததால், அங்கு சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. இதை தடுக்கவும், ஊழியர்களின் சிரமத்தை போக்கவும் புதிய கட்டிடத்தில் ரேஷன் கடையை திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story