கோவையில் கண் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி


கோவையில் கண் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 13 March 2022 10:02 PM IST (Updated: 13 March 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கண் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கோவை

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 2-வது வாரம் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தனியார் மருத்துவமனைகள் சார்பில் கோவை ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட நர்சு உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இந்தியாவில் கண் அழுத்த நோயின் பாதிப்பு 2.6 சதவீதம் ஆகும். 

கண் அழுத்த நோய் இருப்பவர்களிடையே 7 சதவீதம் மட்டுமே தங்களுக்கு கண் அழுத்த நோய் இருப்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர். உயர்ந்த கண் அழுத்தம் கண்களின் பார்வை நரம்பை சேதப்படுத்தி, நிரந்தர கண் பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். 

கண் அழுத்த நோயே பார்வையின்மைக்கு இரண்டாம் முக்கிய காரணமாகும். எனவே கண் அழுத்த நோய் அறிகுறிகளை தெரிந்து கொள்ள மற்றும் அதைக் கட்டுப்படுத்தவும் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த பேரணி நடத்தப்பட்டது, என்றனர்.
1 More update

Next Story