ஸ்ரீகுபேர ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீகுபேர ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
துடியலூர்
துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி ஜெங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகரில் உள்ள ஸ்ரீ குபேர ஷீரடி சாய்பாபா கோவில் 3-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ விக்னேஷ்வரர் பூஜை, லட்சுமி குபேர ஹோமம், சுதர்சன ஹோமம், ஸ்ரீ சந்தன கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், மகா பூர்ணாகுதி, தீபாராதனைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதனையடுத்து, ஸ்ரீ குபேர ஷீரடி சாய்பாபாவிற்கு 51 வகையான மூலிகை அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் நாயக்கன்பாளையம் சீரடி சாய்பாபா சமஸ்தான குழுவின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story