காரை முட்டி தள்ளிய காட்டுயானை
நவமலையில் காரை காட்டுயானை முட்டி தள்ளியது. இதில் டிரைவர் காயம் அடைந்தார்.
பொள்ளாச்சி
நவமலையில் காரை காட்டுயானை முட்டி தள்ளியது. இதில் டிரைவர் காயம் அடைந்தார்.
காட்டுயானை
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நவமலையில் மின் வாரிய ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால், தண்ணீர் தேடி ஆழியாறு அணையை நோக்கி வனத்தை விட்டு காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஆண் காட்டுயானை ஒன்று, மலைவாழ் மக்கள் வசிக்கும் சின்னார்பதி சாலை, வால்பாறை சாலை, நவமலை சாலையில் இரவு நேரம் மட்டும் இல்லாமல் பகலிலும் சுற்றிதிரிந்து வருகிறது.
காரை முட்டியது
இந்த நிலையில் இன்று மாலையில் நவமலை சாலையில் அந்த காட்டுயானை உலா வந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை துரத்தி சென்றது.
உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார்.
இதனால் காட்டுயானை தாக்குதலில் இருந்து அரசு பஸ் தப்பியது. எனினும் பஸ்சுக்கு பின்னால் வந்த காரை ஆக்ரோஷத்தில் காட்டுயானை முட்டி தள்ளியது. இதனால் சாலையோரத்தில் கார் உருண்டு விழுந்து கவிழ்ந்தது. பின்னர் காட்டுயானை அங்கிருந்து சென்றது.
சிகிச்சை
இதன் காரணமாக அந்த காரில் வந்த மின்வாரிய ஆம்புன்ஸ் டிரைவர் சரவணன்(வயது 49) காயம் அடைந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த அவர்கள், காருக்குள் காயம் அடைந்து கிடந்த சரவணனை மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவம் காரணமாக நவமலை பகுதி மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story