என்ஜினீயரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் ‘அபேஸ்’


என்ஜினீயரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் ‘அபேஸ்’
x
தினத்தந்தி 14 March 2022 4:25 PM IST (Updated: 14 March 2022 4:25 PM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரின் வங்கி கணக்கில் நூதன முறை திருட்டு தொடர்பாக வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை வடபழனியை சேர்ந்தவர் ஷிகர் சுக்லா (வயது 54). என்ஜினீயரான இவர், தனது வீட்டில் உள்ள பிரிட்ஜை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்து இருந்தார். அதனை பார்த்து ஷிகர் சுக்லாவின் செல்போனில் தொடர்பு கொண்ட ஆசாமி, அந்த பிரிட்ஜை தான் வாங்கி கொள்வதாக கூறி ஒரு ‘லிங்கை’ அனுப்பினார். அந்த ‘லிங்கை கிளிக்’ செய்து அதில் உள்ள ‘கியூஆர் கோடை ஸ்கேன்’ செய்தால் தங்களுக்கு பணம் வந்து சேரும் எனவும் கூறினார்.

அதை நம்பிய ஷிகர் சுக்லாவும் மர்ம ஆசாமி அனுப்பிய ‘கியூஆர் கோடை ஸ்கேன்’ செய்தார். சிறிது நேரத்தில் ஷிகர் சுக்லா வங்கி கணக்கிலிருந்து ரூ.57 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நூதன திருட்டு தொடர்பாக வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story